கொரோனா தொற்றால் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட முழு அடைப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட நலிவடைந்த ஏழை குடும்பங்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தால் நீதித்துறை ஊழியர்களிடமிருந்து முதல் கட்டமாக திரட்டப்பட்ட நிதி ரூபாய் 15,000/-லிருந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூபாய் 1,000/- அளவில் அன்றாட தேவைகளுக்கான அரிசி, பலசரக்கு பொருட்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை வாங்கி அவர்களது இல்லத்திற்கு சென்று நேரடியாக வழங்கப்பட்டது. மேலும் அடுத்த கட்டமாக ரூபாய் 21,000/- ஊழியர்களிடமிருந்து திரட்டப்பட்டு அதனுடன் சங்க நிதியிலிருந்து …
27/06/2020 archive
Jun 27 2020
ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முக கவசம் வழங்கியது
நாகர்கோவில் சார்பு நீதிமன்ற ஊழியர் திருமதி. விஜயராணி அவர்களது முயற்சியால் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவரகள் பாதுகாப்பாக முக கவசம் அணிந்து பணியாற்ற அவராகவே முன்வந்து 15 முக கவசங்கள் கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் தயார் செய்து ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் திரு. மணிமுத்து கலந்து கொண்டார்.