1.2.2020 மற்றும் 2.2.2020 அன்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு குண்டு எறிதல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற நாகர்கோவில் கூடுதல் மாவட்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் திரு கோபிநாத் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களது முன்னிலையில் பரிசு பெற்றபோது…

உலக அளவிலான உடல் வலுப்போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்ற நாகர்கோவில் முதன்மை மாவட்ட நீதிமன்ற நகல் ஆராய்வாளர் திரு நிஷாந்த் மற்றும் இத்தாலி நாட்டில் வைத்து நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் சதுரங்க போட்டியில் கலந்து கொண்ட இரணியல் உரிமையியல் நீதிமன்ற தட்டச்சர் திரு சிவராஜ் அவர்களுக்கும் 26.01.2020 அன்று நடைபெற்ற குடியரசு தின விழாவின் போது கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரால் கௌரவிக்கப்பட்டதோடுநமது மரியாதைக்குரிய முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களது முன்னிலையில் நினைவு பரிசு வழங்கி அன்றைய தினமே சிறப்பித்தனர்.

நீதிமன்ற ஊழியர்களால் பொங்கல் விழா

11.01.2020 அன்று குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் வைத்து நீதிமன்ற ஊழியர்களால் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஆசிய அளவிலான உடல்வலுப் போட்டியில் கலந்து கொண்டு

ஆசிய அளவிலான உடல்வலுப் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் வென்று நமது நாட்டிற்கும் நமது நீதித்துறைக்கும் பெருமை சேர்த்த நமது முதன்மை மாவட்ட நீதிமன்ற நகல் ஆராய்வாளர் திரு. நிஷாந்த் அவர்களுக்கு 04.12.2019 புதன் கிழமை மாலை கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் மரியாதைக்குரிய முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள் முன்னிலையில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் நினைவுப் பரிசு மரியாதைக்குரிய முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள் வழங்கி திரு. நிஷாந்த் அவர்களை கௌரவித்து வாழ்த்திப் பேசினார். விழாவில் நமது ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழ் நாடு நீதித்துறை ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

தமிழ் நாடு நீதித்துறை ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் 16.11.2019 சனிக்கிழமை நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தின் அருகே உள்ள வளனார் திருமண மண்டபத்தில் வைத்து காலை 10 மணியளவில் மாநில தலைவர் தோழர். செந்தில் குமார் அவர்களால் கொடியேற்றி துவங்கி வைக்கப்பட்டது. அதன் பின்னர் *நீதித்துறையில் பணியாற்றி காலமான தோழர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு சரியாக 10.30 மணிக்கு கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்க செயலாளர் திரு. மங்கை மணவாளன் அவர்களால் வரவேற்புரை வழங்கி தமிழ் நாடு நீதித்துறை ஊழியர் சங்க *மாநில தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கி வரவேற்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் தோழர். வெங்கடேசன், நமது முன்னாள் மாநில தலைவர் தோழர். கருணாகரன், *முன்னாள் மாநில துணை தலைவர் மண்ணின் மைந்தர் தோழர். வேதமணி, கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்க முன்னாள் செயலாளர் தோழர். லெக்ஷ்மண பெருமாள் ஆகியோருக்கும் நினைவு பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. கூட்டத்தில் பொருளாளர் அறிக்கை வாசிக்கப்பட்டு, எழுத்து மூலமாக வழங்கப்பட்ட பொதுச் செயலாளர் அறிக்கையின் மீது ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து வந்த மாவட்ட நிர்வாகிகள் விவாதம் மேற்கொண்டனர். *மொத்தம் 25 மாவட்டங்கள் விவாதத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக மாவட்ட நிர்வாகிகளின் விவாதங்களின் அடிப்படையில் மாநில மையத்தால் தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டன.
மேலும் மாநில செயற்குழுவிற்கான காலை மற்றும் மதிய உணவு வகைகளை சிறந்த முறையில் சுவையாக அமைத்து தந்த தோழர் சங்கர் குமார் மற்றும் அவருடன் இணைந்து இரவெல்லாம் கண்விழித்து உதவி செய்த உணவு ஏற்பாடு குழு உறுப்பினர்கள் தோழர்கள் சிவா, பிரசாத், யோகேஸ்வரன், சுப்பிரமணி ஆகியோருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
மேலும் வெளி மாவட்டங்களிலிருந்து வந்த தோழர்களை சிறந்த முறையில் வரவேற்ற தோழர்கள் மணிமுத்து, மங்கை மணவாளன், ராஜன், அபிஷேக், ஐவர், கோபி, சாந்தி மற்றும் சிவகாமி ஆகியோருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
மேலும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற மேடை அலங்காரம் செய்து அண்ணன் மணிமுத்து, சுப்பிரமணி, தம்பி ஜோஸ், அபிஷேக், ஐவர், பூர்ணராஜ், மாரி, வீரமணி, சரவணகுமார், வள்ளிக்கண்ணு, நாகமணி, ஹரிகிருஷ்ணன், நாகராஜன், சீனிவாசன், வினாயகம்,
சகோதரி சாந்தி, சிவகாமி, விஜயகீதா, மார்கரெட் வித்யா, ஆகியோருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
மேலும் 18 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மாநில செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற நன்கொடை அளித்த அனைத்து நீதிமன்ற ஊழியர்களுக்கு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மாநில செயற்குழு கூட்ட ஏற்பாடுகளை சிறப்பாக செய்த கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி நீதித்துறை நடுவர்-1 திரு.நிலவேஷ்வரன் அவர்கள், அந்நீதிமன்ற சுருக்கெழுத்தர் திருமதி. சாரதி

தூத்துக்குடி நீதித்துறை நடுவர்-1 திரு.நிலவேஷ்வரன் அவர்கள், அந்நீதிமன்ற சுருக்கெழுத்தர் திருமதி. சாரதி என்பவரை,04.11.2019 அன்று மாலை தனது சேம்பரில் வைத்து, முறையாக தட்டச்சு செய்யவில்லை என்ற காரணத்திற்காக லெட்டர் பேடினை எடுத்து எறிந்ததில் திருமதி. சாரதியின் தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டு ஐந்து தையல் போடப்பட்டுள்ள
இந்த கொடூரச்செயலை கண்டித்து 05-11-2019 *மாலை 6.00 மணிக்கு நாகர்கோவில் முதன்மை மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் வாயில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் திரளாக ஊழியர்கள் கலந்து கொண்டு ஆர்பாட்டத்தினை சிறப்பித்தனர்.

பணி நிறைவு பெற்ற மதிப்பிற்குரிய மகிளா நீதிபதி திரு. ஜாண் ஆர்.டி. சந்தோஷம் அவர்களுக்கு ..

(30-09-2019) பணி நிறைவு பெற்ற மதிப்பிற்குரிய மகிளா நீதிபதி திரு. ஜாண் ஆர்.டி. சந்தோஷம் அவர்களுக்கு தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் பணி நிறைவு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

ஓணம் பண்டிகை

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றங்களிலுள்ள ஊழியர்கள் ஓணம் பண்டிகையை பூக்களால் அத்தமிட்டு கேரள பாரம்பரிய உடையணிந்து இன்று 10-09-2019 கொண்டாடி மகிழ்ந்தனர்.

அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு

கன்னியாகுமரி மாவட்ட அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு 24.08.2019 அன்று நாகர்கோவிலில் உள்ள அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட மாநாட்டில் தோழர்கள் யோகேஸ்வரன், மங்கை மணவாளன், ஷிபு, அபிஷேக், ஐயப்பன் மற்றும் ஆவுடையப்பன் ஆகியோர் நீதித்துறை சார்பில் கலந்து கொண்டனர்.

கொட்டாரம் அருகிலுள்ள மனோலயா மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில்…

15.08.2019 அன்று கொட்டாரம் அருகிலுள்ள மனோலயா மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் காலை உணவு நமது ஊழியர்களால் வழங்கப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.