பணி நிறைவு பெற்ற மதிப்பிற்குரிய மகிளா நீதிபதி திரு. ஜாண் ஆர்.டி. சந்தோஷம் அவர்களுக்கு ..

(30-09-2019) பணி நிறைவு பெற்ற மதிப்பிற்குரிய மகிளா நீதிபதி திரு. ஜாண் ஆர்.டி. சந்தோஷம் அவர்களுக்கு தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் பணி நிறைவு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

ஓணம் பண்டிகை

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றங்களிலுள்ள ஊழியர்கள் ஓணம் பண்டிகையை பூக்களால் அத்தமிட்டு கேரள பாரம்பரிய உடையணிந்து இன்று 10-09-2019 கொண்டாடி மகிழ்ந்தனர்.

அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு

கன்னியாகுமரி மாவட்ட அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு 24.08.2019 அன்று நாகர்கோவிலில் உள்ள அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட மாநாட்டில் தோழர்கள் யோகேஸ்வரன், மங்கை மணவாளன், ஷிபு, அபிஷேக், ஐயப்பன் மற்றும் ஆவுடையப்பன் ஆகியோர் நீதித்துறை சார்பில் கலந்து கொண்டனர்.

கொட்டாரம் அருகிலுள்ள மனோலயா மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில்…

15.08.2019 அன்று கொட்டாரம் அருகிலுள்ள மனோலயா மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் காலை உணவு நமது ஊழியர்களால் வழங்கப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

நீதிபதி திரு. S. கருப்பையா அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

30.06.2019 அன்று மரியாதைக்குரிய முதன்மை மாவட்ட நீதிபதி திரு. S. கருப்பையா அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர்களால் நடத்தப்பட்டது. விழாவினை மரியாதைக்குரிய மகிளா நீதிபதி திரு. ஜாண் ஆர்.டி. சந்தோஷம் அவர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. விழாவில் தலைமை குற்றவியல் நடுவர், சார்பு நீதிபதிகள், குற்றவியல் நடுவர்கள், நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர், செயலாளர் மற்றும் முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். விழாவில் கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் திரளாக கலந்து மரியாதைக்குரிய முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களின் சிறப்பை வாழ்த்திப்பேசி சிறப்பித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் வைத்து மாநில செயற்குழு கூட்டம்

20.07.2019 அன்று கடலூர் மாவட்டத்தில் வைத்து மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் தோழர் ஐவர் மற்றும் ஷிபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தின் சார்பில் மாநில சங்கத்திற்கு tnjeastatecentre.org.in” என்ற இணையம் பதிவு செய்யப்பட்டு அதை வடிவமைத்த கன்னியாகுமரி மாவட்ட System Analist தோழர். ஜாண் சுஜன் அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

கன்னியாகுமரி மாவட்ட அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் வைத்து 04.07.2019 அன்று நடைபெற்றது.
ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் திரு. நிஷாந்த், Examiner, முதன்மை மாவட்ட நீதிமன்றம் முதல் பரிசு பெற்றதோடு மாநில அளவில் விளையாட தகுதி பெற்றார். கூடுதல் மாவட்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் கோபிநாத் 2வது பரிசும் பெற்றார்.
செஸ் போட்டியில் நாகர்கோவில் உரிமையியல் நீதிமன்ற உதவியாளர் ஸ்பென்சர் அலெக்ஸாண்டர் முதல் பரிசு பெற்று மாநில அளவில் விளையாட தகுதி பெற்றார்.
அதுபோல் கபடி போட்டியில் நீதித்துறை அணி முதலிடத்தை பெற்று மாநில அளவில் விளையாட தகுதி பெற்றது.
விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு நீதித்துறைக்கு சிறப்பு சேர்த்த ஊழியர்களுக்கு மரியாதைக்குரிய முதன்மை மாவட்ட நீதிபதி (பொறுப்பு) திரு. கோமதி நாயகம் அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்தார்.

ஆதரவற்ற சிறுவர்கள் இல்லத்திற்கு சென்று …

01-07-2019 மாலை 7 மணியளவில் ஆசாரிப்பள்ளம் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் அமைந்துள்ள ஆதரவற்ற சிறுவர்கள் இல்லத்திற்கு சென்று அவர்களுக்கு தேவையான ரூபாய் 2400/- மதிப்பிலான 80 நோட் புத்தகங்கள் வழங்கப்பட்டது. நிகழ்வில் முதன்மை மாவட்ட நீதிமன்ற தலைமை எழுத்தர் திரு மணிமுத்து, உதவியாளர் திரு. அபிஷேக், ஜெராக்ஸ் ஆப்பரேட்டர் திரு. சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

செயற்குழு கூட்டம்

11.05.19 அன்று காலை இரணியல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து மாவட்ட செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டது.

பெருஞ்சிலம்பு மனவளர்ச்சி குன்றியோர் பராமரிப்பு காப்பகம் …


17-05-2019 அன்று பெருஞ்சிலம்பு மனவளர்ச்சி குன்றியோர் பராமரிப்பு காப்பகத்திற்கு சென்று கன்னியாகுமரி நீதித்துறை ஊழியர்கள் அளித்த நன்கொடையில் காலை உணவு வழங்கப்பட்டது. மொத்தம் 94 மனநலம் குன்றிய குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகத்தில் உள்ளனர். நிகழ்வில் திருவாளர்கள் சுரேஷ்குமார், மங்கை மணவாளன், பெஞ்சமின் ஜோஸ், ஐவர் மற்றும் அபிஷேக் கலந்து கொண்டனர்.