விளையாட்டு போட்டி மற்றும் கோலப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா

2019 ம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதல் மற்றும் 2ம் இடம் பெற்ற கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர்களின் குழந்தைகளுக்கான பரிசளிப்பு விழா மற்றும் 06-04-2019 அன்று கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தால் நடத்தப்பட்ட ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி மற்றும் கோலப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நாகர்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வைத்து மரியாதைக்குரிய முதன்மை மாவட்ட நீதிபதி திரு. கருப்பையா அவர்கள் தலைமையிலும் மரியாதைக்குரிய குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி திரு. கோமதிநாயகம், மகிளா நீதிபதி திரு. ஜாண் ஆர்.டி. சந்தோஷம், கூடுதல் மாவட்ட நீதிபதி திரு. அப்துல் காதர், Permanent Lok Adalat Chairman திரு. மகிழேந்தி, தலைமை குற்றவியல் நடுவர் திரு. அருணாச்சலம், சார்பு நீதிபதிகள் மற்றும் குற்றவியல் நடுவர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். விழாவில் கலந்து கொண்ட நீதிபதிகள் அனைவருக்கும் கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் நினைவு பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க அமைப்பு தினத்தை முன்னிட்டு…

09-04-2019 அன்று நமது தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க அமைப்பு தினத்தை முன்னிட்டு ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நீதித்துறை ஊழியர் சங்கத்தால் நடத்தப்படும் ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி.

06-04-2019 அன்று கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தால் நடத்தப்படும் ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகளை மரியாதைக்குரிய முதன்மை மாவட்ட நீதிபதி திரு. கருப்பையா அவர்களும் மகிளா நீதிபதி திரு. ஜாண் சந்தோஷம் அவர்களும் மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதி திரு. அப்துல் காதர் அவர்களும் தொடங்கி வைத்து சிறப்பாக நடைபெற்றது.
மேலும் கோலப் போட்டியினை குற்றவியல் நடுவர் (விரைவு நீதிமன்றம்) செல்வி. பாரததேவி அவர்களும் தொடங்கி வைத்து சிறப்பு செய்தனர். மேலும் பெரும்பாலான ஊழியர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு போட்டிகளை சிறப்பு செய்தனர்

2019 ம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதல் மற்றும் 2ம் இடம்

2019 ம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதல் மற்றும் 2ம் இடம் பெற்ற கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர்களின் குழந்தைகளுக்கான பரிசளிப்பு விழா மற்றும் 06-04-2019 அன்று கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தால் நடத்தப்பட்ட ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி மற்றும் கோலப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நாகர்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வைத்து மரியாதைக்குரிய முதன்மை மாவட்ட நீதிபதி திரு. கருப்பையா அவர்கள் தலைமையிலும் மரியாதைக்குரிய குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி திரு. கோமதிநாயகம், மகிளா நீதிபதி திரு. ஜாண் ஆர்.டி. சந்தோஷம், கூடுதல் மாவட்ட நீதிபதி திரு. அப்துல் காதர், Permanent Lok Adalat Chairman திரு. மகிழேந்தி, தலைமை குற்றவியல் நடுவர் திரு. அருணாச்சலம், சார்பு நீதிபதிகள் மற்றும் குற்றவியல் நடுவர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். விழாவில் கலந்து கொண்ட நீதிபதிகள் அனைவருக்கும் கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் நினைவு பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

தேனியில் வைத்து நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில்

23-03-2019 அன்று தேனியில் வைத்து நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போது

காஷ்மீர் புலவாமா தாக்குதல்…..

காஷ்மீர் புலவாமா தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி மற்றும் அரியலூர் மாவட்ட ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நமது கன்னியாகுமரி முதன்மை மாவட்ட நீதிபதி திரு. கருப்பையா அவர்களின் அறிவுரைப்படி நன்கொடை நீதிபதிகள் மற்றும் ஊழியர்களின் விருப்பப்படி திரட்டப்பட்ட மொத்த ரூபாய் 55000/- ல் ரூபாய் 27500/- ஐ வரைவோலையாக தூத்துக்குடி மாவட்ட சட்ட உதவி மையத்திற்கும் அரியலூர் மாவட்ட சட் உதவி மையத்திற்கும் ரூபாய் 27500/- வரைவோலை அனுப்பி வைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
நன்கொடை வழங்கிய நீதிபதிகள் மற்றும் ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்
Download the letter

குடியரசு தின விழா மற்றும் நமது ஊழியர்களின் குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள்

26-01-2019 அன்று குடியரசு தின விழா மற்றும் நமது ஊழியர்களின் குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள், வினாடி வினா போட்டிகள் மற்றும் மன அழுத்த மேலாண்மை வகுப்பு ஆகியவற்றை நீதிபதிகள் மற்றும் ஊழியர்களின் முன்னிலையில் நடத்திய போது…

பொங்கல் விழா…

11-01-2019 அன்று குழித்துறை தாலுகா நீதிமன்ற ஊழியர்கள் பொங்கல் விழா நடத்தி சிறப்பித்த பொது

சிறப்பு பொதுக்குழு கூட்டம், தக்கலை …

06-01-2019 அன்று தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க கன்னியாகுமரி மாவட்ட மைய சிறப்பு பொதுக்குழு கூட்டம் தக்கலை அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் வைத்து நடைபெற்ற போது..

கவன ஈர்ப்பு வாயில் கூட்டம்.

தமிழ் நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தின் சார்பில் 26.12.2018 அன்று மாலை 6 மணியளவில் நாகர்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு கவன ஈர்ப்பு வாயில் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட நீதிமன்ற தலைமை நிர்வாக அலுவலர் மற்றும் மாவட்ட சிரஸ்தார்களுக்கு மாவட்ட மாறுதலை உடனடியாக கைவிட்டு மீண்டும் சொந்த மாவட்டத்திலேயே பணிஅமர்த்தவும் நீதித்துறையில் பல வருடங்களாக பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை 10(a)i பணி நிரந்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வாயில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திரளான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.